About

நீண்ட கால  பின்னணியைக் கொண்ட இவ்வுள்ளுராட்சி மன்றத்தின் வரலாற்றுத் தொடர்பு கீழ்வருமாறு.


01. 1943-1950 ஆண்டு - கோறளைப்பற்று கிராம சபை தலைவர் கௌரவ ஹபீப் லெப்பை  

02. 1965 ஆண்டு ஓட்டமாவடி கிராம சபையாக உருவாக்கம். (176 சதுர கிலோமீற்றர் பரப்புடன்) ஓட்டமாவடி 1,2,3, மீராவோடை - 4,5 மற்றும் வாகனேரி (கள்ளிச்சை, வடமுனை, வாகனேரி) 6 வட்டாரங்கள். தலைவர் - கௌரவ அல்ஹாஜ் A. இஸ்மாலெப்பை (JP)


03. 1967.10.15 இல் முந்தைய சபைக் கட்டடத்திற்கு கௌரவ K.W.தேவநாயகம் (பா.உ) அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.


04. 1969.04.12 – அப்போதைய உள்ளுராட்சி அமைச்சர் கௌரவ R. பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.

தலைவர் - கௌரவ A. இஸ்மாலெப்பை (JP)  


06. 1971-1977ஆம் ஆண்டு வரை கௌரவ UL. முகம்மது சரீப்  (JP)  -  தலைவர்

07. 1977-1994ஆம் ஆண்டு வரை ஆணையாளர் பரிபாலனம்

08. 1987ஆம் ஆண்டு 13ஆம் இலக்க மாகண சபைச் சட்டத்தின் கீழ் பிரதேச சபையாக மாற்றம்


09. 1993.01.01 இல் 883ஆம் இலக்க வர்த்தமானி பிரகடனம் 


176 சதுர கிலோமீற்றர் பரப்பளவு - 9 உறுப்பினர்கள்

கிராம சேவக பிரிவுகளின் விபரங்கள் வருமாறு :- 207 மீராவோடை கிழக்கு, 207A    மாஞ்சோலை, 207 B மீராவோடை மேற்கு, 208 ஓட்டமாவடி - 03, 208B  ஓட்டமாவடி – 01 தெற்கு, 208 B/2 ஓட்டமாவடி - 02 வடக்கு, 210B ஓட்டமாவடி - 02, 210B காகிதநகர், 210 வாகனேரி, 210 A/1 வடமுனை, 210A கள்ளிச்சை, 210A/2 ஊத்துச்சேனை, 210B புணானை கிழக்கு, 210C தியாவட்டவான்.


10. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற விகிதாசார முறையிலான  தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முதலாவது  தவிசாளராக கௌரவ முகைதீன் அப்துல் காதர் அவர்களும் ஏனைய 8 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


11. 1999ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி மூலம் விசேட ஆணையாளரின் கீழ் நிருவாகம்.


12. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கௌரவ M.K. முகைதீன் (லெப்பை ஹாஜியார்) தவிசாளராகவும் ஏனைய 8 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


13. 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கௌரவ KBS.  ஹமீட் தவிசாளராகவும் 08 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.


14. 2018ம் ஆண்டில் புதிய அரசியல்  திருத்தத்திற்கமைய வட்டார ரீதியான தேர்தல் முறையின் தவிசாளராக கௌரவ IT.  அமிஸ்டீன், மற்றும் 17 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.


15. 2020 ஆகஸ்ட்  தொடக்கம் இன்றுவரை கௌரவ AM நௌபர் - தவிசாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்


மூவினங்களையும் குடிகளாகக் கொண்ட இப்பிரதேச சபையானது இன, மத பேதங்களின்றி மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக வரட்சி காலங்களில் குடிநீர் வழங்கல், திண்மக் கழிவகற்றல்,  மக்களுக்குத் தேவiயான வீதியமைப்பு, சிறந்த வடிகாலமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், அத்தோடு சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், இளைஞர் உடற்பயிற்சி நிலையம், சனசமூக நிலையம், பாலர் பாடசாலைகள், நூலகங்களை அமைத்து பராமரித்தல் மற்றும் மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அனர்த்த நிலைமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்  போன்ற சேவைகளையும் செய்து வருகின்றது.


அத்துடன் விசேடமாக தற்போது நாட்டிலும் மற்றும் சர்வதேசத்திலும் மக்களை வதைக்கும் கொவிட் - 19 நோய்களால்  மரணிக்கும் உடல்கள் இலங்கை நாட்டில் எரிக்கப்பட்ட போது அதனை எமது பிரதேசத்தில் நல்லடக்கம் செய்வதற்கு முதலாவது இடத்தினை வழங்கி இலங்கை நாட்டிற்கு நற்பெயரையும், புகழையும் பெற்ற ஒரேயொரு சபையாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை திகழ்கின்றது என்பதில் பெருமிதம் அடைகின்றோம்.


இதன் வளங்களை பொருத்தமட்டில் 40ற்கு மேற்பட்ட வாகனங்கள், 3 நூலகங்கள், 7 சிறுவர் பூங்காக்கள், 6இற்கு மேற்பட்ட விளையாட்டு மைதானங்கள், ஹரித்த உயன வளாகம், இளைஞர் உடற்பயிற்சி நிலையம், சொகுசு மலசல கூடத்தொகுதி, பாரிய அளவிலான திண்மக் கழிவுகளிலிருந்து சேதனப்பசளை உருவாக்கல் நிலையம் மற்றும் 15இற்கு மேற்பட்ட மயானங்கள், ஒரு கொவிட் விசேட மையவாடி உட்பட  விலங்கறுமனை, பொது மலசலகூடத் தொகுதிகள் மற்றும் பல பொது கிணறுகள், 45இற்கு மேற்பட்ட  கடைத்தொகுதிகளைக் கொண்ட மீன்சந்தைக் கட்டடத் தொகுதி மற்றும் கொழும்பு பிரதான வீதியில் வருமானம் தரக் கூடிய 3 கடைத் தொகுதிகள் உட்பட 150ற்கு மேற்பட்ட நிரந்தர/தற்காலிக ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.


வருமானத்தை பொறுத்த வரையில் முத்திரை தீர்வை, நீதிமன்ற தண்டப்பணம், வியாபார அனுமதிப்பத்திரம், சுற்றாடல் அனுமதிப்பத்திரம், மாட்டிறைச்சி மற்றும் கோழியிறைச்சிக் கடைகள், அரிசி ஆலைகள், மரமரியும் ஆலைகள், ஆதனவரி அறவீடு, இறால் வாடி, JCB,Vibrator  வாடகை மற்றும் கட்டட விண்ணப்ப படிவம் வழங்குதல் போன்ற சேவைகள் நடைபெறுகின்றது.


2021ஆம் ஆண்டு எதிர்பார்த்த வருமானத்தினை கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட அசாதாரண ச10ழ்நிலை காரணமாக முழுமையாக அறவிட முடியாத நிலையேற்பட்டதுடன், எமது சபையின் வருடாந்த நடவடிக்ககைளை திருப்திகரமாக கொண்டு நடாத்துவதிலும் அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டது. 2022ஆம் ஆண்டு எதிர்பார்த்த வருமானத்தினை பெறுவதற்கு  கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தோடு கௌரவ மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெற்று இச்சபை எதிர்வரும் ஆண்டு உலக வங்கியின் நிதியின் மூலமும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியின் மூலமும்  பாரியளவிலான சேவையினை இப்பிரதேசத்தில் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Clean Sri Lanka விழிப்புணர்வு கூட்டம்

அரசினால் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka கொள்கை அமுலாக்க விழிப்புணர்வு கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் கல...